முன்பு ரோஹித்தை கிண்டல் பண்ணீங்க. இப்போ விராட் கோலியையே கிண்டல் பண்றீங்களா? – சேவாக்கை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எஞ்சியிருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி இன்று கடைசி நாளை எட்டியுள்ளது. இன்றைய கடைசி நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 119 ரன்களை மட்டுமே தேவை என்ற நிலையில் கைவசம் 7 விக்கெட்டுகள் இருப்பதனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் மூன்று நாட்கள் முடிவடைந்த வேளையில் மிக வலுவான முன்னிலையில் இருந்த இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்டத்தில் முற்றிலுமாக தங்களது முன்னிலையை தவறவிட்டது என்று கூறலாம்.

ஏனெனில் இங்கிலாந்த வீரர்கள் இந்த இரண்டாவது இன்னிங்சில் ஒரு நாள் கிரிக்கெட்டை விளையாடுவது போன்று அதிரடியாக பேட்டிங் செய்து வருகின்றனர். அதன்காரணமாக தற்போது இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி மிகவேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியை ஹிந்தியில் வர்ணனை செய்து வரும் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் மூன்றாம் நாள் ஆட்டநேரத்தின் போது விராட் கோலியை விமர்சித்து சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் மீது தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் கடும் கோபத்தினை விமர்சனங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டா ஆட்டம் இழுந்ததும் அந்த விக்கெட்டை கொண்டாடும் வகையில் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது இந்த விக்கெட் கொண்டாட்டம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகியது.

இந்நிலையில் விராட் கோலி அப்படி டேன்ஸ் ஆடி இங்கிலாந்து வீரரின் விக்கெட்டை கொண்டாடியதை அடுத்து விராட் கோலியை கிண்டல் செய்து சில கருத்துக்களை நேரலையில் சேவாக் பகிர்ந்தார். சேவாக் அப்படி கிண்டல் செய்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவினை பகிர்ந்து முன்னணி வீரரான விராட் கோலியை எவ்வாறு கிண்டல் செய்யலாம் உங்களது கமெண்டரியை நாடு முழுவதும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தரமற்ற செயலை செய்ய வேண்டாம் என்றும் இனி மேல் சேவாக் கமண்ட்ரி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கடினமான சூழ்நிலைகளில் இந்திய அணிக்காக ஒரு போர் வீரன் போன்று இவர் செயல்படுகிறார் – சிராஜ் புகழாரம்

சேவாக் இதேபோன்று கமென்டரியில் இந்திய வீரர்களை விமர்சிப்பதோ, கிண்டல் செய்வதோ புதிது கிடையாது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் தற்போதைய கேப்டனான ரோகித்தை அவர் வடாபாவு என்று கிண்டல் செய்திருந்த வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் விக்கெட் கொண்டாட்டத்தையும் அவர் கிண்டல் செய்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement