என்ன இது முட்டாள் தனமாக முடிவினை எடுக்கிறார்கள் – பி.சி.சி.ஐ வறுத்தெடுத்த ரசிகர்கள்

crick-BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த கனமழை காரணமாக நேற்றைய போட்டி டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது.

IND-vs-SA

- Advertisement -

இந்நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அந்த செய்தியினை தெரிவித்தது. அப்பொழுது அந்த பதிவை கண்ட இந்திய ரசிகர்கள் பிசிசிஐ-க்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

அதற்கு காரணம் யாதெனில் போட்டிகளை அட்டவணைப்படுத்தும் நிர்வாகம் அந்தந்த நகரங்களின் தட்பவெப்ப நிலை எவ்வாறு இருக்கிறது ? அங்கு போட்டி நடத்தப்படும் போது மழை வருமா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கிறதா ? என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றார்போல் போட்டிகளை நடத்த வேண்டும்.

rain

ஏனென்றால் டிக்கெட்டுகளை எடுக்கும் இந்திய ரசிகர்கள் அந்த போட்டிகளில் நடக்காவிடில் ஏமாற்றம் அடைவார்கள். மேலும் அவர்களுக்கான நாள் அன்று வீணாகிவிடும் எனவே இனிமேல் நடத்தப்படும் போட்டிகளில் அட்டவணைப்படுத்தி முறைப்படுத்தி நடத்துங்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் போட்டிகளை சரியாக நடத்தினால்தான் அந்தப் போட்டியில் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement