அப்போவே சொன்னோம் கேட்டிங்களா ? இனியும் இவர் தேவையா ? – சீனியர் வீரரை திட்டிதீர்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆண்டு தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

indvseng

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைதொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு ரன்னில் வெளியேறிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாராவை ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக அதிகளவு விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் சமீபகாலமாக புஜாராவின் பேட்டிங் பார்ம் படுமோசமாக உள்ளது.

pujara 1

தற்போதும் அவர் தொடர்ச்சியான சறுக்கலை சந்தித்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புஜாராவின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டியில் அவருக்கு பதிலாக சூரியகுமார் களமிறங்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

pujara 2

ஆனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் காரணமாக மீண்டும் அதே அணியை கோலி களமிறக்கினார். இந்நிலையில் இந்த போட்டியிலும் புஜாரா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அவரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தது மட்டுமின்றி இனிவரும் போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு தேவையா ? என்றும் கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement