ரோஹித்துக்கு காயம்னு விட்டீங்க. அப்போ இவரை மட்டும் எதுக்கு ஆஸ்திரேலியா கூட்டிட்டு போனீங்க – ரசிகர்கள் அதிருப்தி

Rohith
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் குறித்த தகவல்களே அதிக அளவில் பரவிவருகின்றன. ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடரில் ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் சில போட்டிகளை தவிர்த்த ரோஹித்தை இந்திய அணியின் நிர்வாகம் தெரிவு செய்யவில்லை. மேலும் துவக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படாததால் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவே அவரை டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க விரும்புவதாக பிசிசிஐ தெரிவித்தது.
மேலும் ரோஹித் 70% காயத்தில் இருந்து விடுபட்டால் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என்று கூறப்பட்டது.

அதனை ரோஹித்தை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைத்தது. தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் ரோகித் காயத்திலிருந்து விடுபடுவதற்கான பயிற்சி எடுத்து வந்தாலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் எஞ்சிய கடைசி இரண்டு போட்டிகளிலும் விளையாடுவதும் இப்போது சந்தேகமாக உள்ளது. இதற்கு காரணம் என்னவென்று புரியாமல் இருக்கும் ரோஹித் மற்றும் இந்தியா ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

rohith 1

ரோஹித்தின் உடல்நிலை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்குமாறும், ஏன் அவர் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார் ? என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் முக்கியமாக அவர்கள் குறிப்பிடுவது யாதெனில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் சகா ஐபிஎல் தொடரின்போது காயமடைந்து சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அவரை மட்டும் இந்திய அணியுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

saha 2

காயத்தோடு அவரை மட்டும் ஏன் ஆஸ்திரேலிய நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் ? அதே போன்று ரோகித்தையும் அழைத்துச் சென்று இருக்கலாமே ? பிசிசிஐ வேண்டுமென்றே ரோஹித்துக்கு கட்டம் கட்டுகிறது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எது எப்படி இருப்பினும் பிசிசிஐ எடுக்கும் முடிவே ரோஹித்தின் கடைசி முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement