விதிமுறையை மீறிய 5 இந்திய வீரர்களுக்கு இந்திய ரசிகர் கட்டிய தொகை எவ்வளவு தெரியுமா ? – வெளியான பில்

bill

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றியது. தற்போது நடைபெற்று வரும் நான்கு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வருகிற 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Gill

தற்போது ஐபிஎல் தொடருக்கு பின் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இந்திய அணியுடடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று, இந்திய கிரிக்கெட் ரசிகரான நவால்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், சைனி மற்றும் சுப்மான் கில் ஆகியோர் விதிமுறைகளை மீறி ஹோட்டலுக்கு சென்றது தெரியவந்தது.

இந்திய கிரிக்கெட் ரசிகரான நவால்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “மெல்போர்ன் உணவகத்தில் எனக்கு அடுத்த மேஜையில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், சைனி, ப்ரித்வி ஷா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அவர்களைப் பார்த்த நான் மகிழ்ச்சியில் ஒரு சிறு வீடியோ ஒன்றை மறைமுகமாக எடுத்தேன்.

அந்த மகிழ்ச்சியுடன் நான் அவர்களுக்கு தெரியாமலே அவர்களின் உணவுக்கான தொகையை 6683 ரூபாய் (AUD 118.69) மதிப்புள்ள கட்டணத்தை செலுத்தினேன். இதன்பிறகு நான் அவர்களது கட்டணத்தை செலுத்தியதை அறிந்தார்கள். உடனடியாக ரோகித் சர்மா பணத்தை கொடுக்குமாறு ரிஷப் பந்திடம் கூறினார். நான் அதற்கு உடன்படவில்லை. மேலும் எங்களது ஹீரோவான இந்திய வீரர்களுக்கு என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன் என்று கூறினேன்.

- Advertisement -

நான் எனது மனைவியுடன் இணைந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ரிஷப் பந்த் என்னை கட்டிப் பிடித்தார். ரிஷப் பந்த் எனது மனைவியிடம் உங்களது மதிய உணவிற்கு நன்றி என்று கூறினார்” என்று இந்திய கிரிக்கெட் ரசிகரான நவால்தீப் சிங் ட்விட் செய்துள்ளார். இவருடைய இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த 5 வீரர்களும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.