இந்தியா தெ.ஆ போட்டியின் போது மைதானத்திற்குள் ஓடிவந்த இளைஞரால் பரபரப்பு – காரணம் இதுதானாம்

Fan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொகாலி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

toss

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 52 ரன்கள் குவித்தார். அதன்பிறகு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் கேப்டன் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் கோலி பெற்றது குறிப்பிடத்தக்கது.

kohli

இந்த போட்டியின்போது மைதான பராமரிப்பாளரான ஒரு இளைஞர் தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யும் பொழுது இந்திய வீரர்களை நோக்கி மைதானத்தில் ஓடிவந்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஓடி வந்த அந்த இளைஞர் வீரர்களுக்கு கை கொடுக்கும் நோக்கில் வீரர்களை நோக்கி சென்றார்.

fan 3

fan 2

fan 1

அதற்குள் மைதான பாதுகாவலர்கள் உள்ளே வந்து அந்த இளைஞரை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரிடம் இது குறித்து விசாரிக்கையில் நான் இந்திய வீரர்களை அருகில் சென்று பார்த்து அவர்களுடன் கை கொடுக்கவே மைதானத்திற்குள் சென்றேன். மத்தபடி எந்த எண்ணமும் எனக்கு கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement