கடந்த சில ஆண்டுகக்களாக இந்திய கிரிக்கெட்அணியில் உள்ள பல்வேறு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. நாம் பார்த்து ரசித்த பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களையும், அவர்கள் சந்தித்த வெற்றி, தோல்விகளையும் , அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மூலமே, ரசிகர்கள் ஒரு சில கிரிக்கெட் வீரர்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டனர்.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களான அசாருதீன், சச்சின் தோனி போன்றவர்களின் வாழ்கை வரலாறுகள் திரைப்படமாக வெளியாகியுளளது. இதில் ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக சாதனை படிக்காத போதிலும், கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் படமாக அமைந்தது. தங்களது வாழ்கை கதையை படமாக எடுக்க இந்த வீரர்களுக்கு எவ்வளவு தொகை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா?
மொஹமத் அசாருதீன் :- கிரிக்கெட் வீரரின் வாழ்கை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் படம். இந்தியில் 2016 ஆம் ஆண்டு, இயக்குனர் டோனி டி சௌசா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், கிரிக்கெட் வீரர் அசாருதீனாக இந்தி நடிகர் ‘இம்ரான் ஹாஸ்மி நடித்திருந்தார். 35 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 56 கோடி வசூலை பெற்றது. ஆனால், இந்த படத்திற்காக அசாருதீன் பணம் எதுவும் வாங்கவில்லை.
தோனி:- இந்தி இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கிய இந்த படம் 2016 ஆம் ஆண்டு ‘தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி ‘ என்ற தலைப்பில் வெளியானது. பாலிவுட் நடிகர் சுஷந் சிங் தோனி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். பிளாக் பாஸ்டர் ஹிட்டான இந்த படத்தை எடுப்பதற்கு தோனிக்கு 80 கோடி ருபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
சச்சின் : – 2017 ஆம் வெளியான சச்சின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ‘சச்சின் : பில்லியன் டாலர் ட்ரீம்ஸ் ‘ என்ற தலைப்பில் வெளியானது. இந்த படம் வெளியான 2 நாட்களில் 17 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்த படத்தின் கதைக்காக சச்சின் 40 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.