இந்திய அணி வீரர்களின் ஜெர்சி நம்பருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் – முழு பட்டியல் இதோ

- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்சியின் பின்னால் ஒரு எண் எழுதப்பட்டிருக்கும். ஒரு இலக்கமாகவோ, இரண்டு இறுக்கமாகவோ அல்லது மூன்று இலக்கமாகவோ ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த எண்னை பொரித்து வைத்திருப்பார்கள் இந்திய வீரர்கள். அப்படி வைத்திருக்கும் எண்ணிற்கு பின்னால் உள்ள ரகசியத்தை தற்போது பார்ப்போம்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் – 10 :

இந்த எண்னை யாராலும் மறக்க முடியாது. தற்போது வரையில் வேறு யாரும் அணுக முடியாதபடி பிசிசிஐ இதனை பாதுகாத்து வைத்திருக்கிறது. ஆனால் தற்போது வரை இதற்கான காரணத்தை சச்சின் டெண்டுல்கர் எந்த ஒரு இடத்திலும் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது பெயரின் முன்னாள் (டெண்)டுல்கர் இருப்பதால் அவர் அந்த என்னை பயன்படுத்தினார் என்ற அதிகாரபூர்வமற்ற செய்தியும் உள்ளது.

Dravid

ராகுல் டிராவிட் – 19 :

- Advertisement -

இது அவருடைய மனைவியின் பிறந்த நாள் எண்ணாகும். எப்போதும் அவரது மனைவியின் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருப்பதற்காக அந்த எண்னை தனது ஜெஸ்ஸியின் பின்னால் வைத்துள்ளார் ராகுல் டிராவிட்.

விரேந்தர் சேவாக் – 00 :

- Advertisement -

முதன்முதலாக 44 என்ற எண்ணை அணிந்திருந்தார் விரேந்தர் சேவாக் .அது தொடர்ந்து அவருக்கு துரதிஷ்டவசமாகவே இருந்ததால் அதன் பின்னர் அதனை மாற்றிவிட்டு 00 என்ற எண்னை அணிந்தார். அதன்பின்னர் என்ற எண்னே இல்லாமல் அணிந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

மகேந்திர சிங் தோனி – 7 :

- Advertisement -

இது அனைவருக்கும் கிட்டத்தட்ட தெரிந்த விஷயமாகும். ஏனெனில் தோனியின் பிறந்தநாள் ஏழாவது மாதத்தின் ஏழாவது தேதியில் வருகிறது. மேலும் அவர் பிறந்த வருடம் 1981 ஆகும் இதில் 81 இரண்டு எண்னை (8-1) எடுத்து கழித்து பார்த்தால் 7 வரும். இதுதான் அவரது எண்னிற்கு பின்னாலுள்ள ரகசியம்.

Kohli-2

விராட் கோலி – 18 :

2006 ஆம் ஆண்டு விராட்கோலி ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடிக்கொண்டிருந்த போது அவருக்கு 18 வயது. மேலும், அந்த போட்டியில் ஆடிக் கொண்டிருந்த போதே 18ஆம் தேதி அவரது தந்தை இறந்துவிட்டார். இதன் காரணமாக தற்போது வரை 18 என்ற எண்ணை தனது ஜெஸ்ஸியின் பின்னால் அணிந்துள்ளார் விராட் கோலி.

Sehwag

ரோஹித் சர்மா – 45 :

முதன்முதலில் ரோகித் சர்மாவின் தாயார் அவரை 9 என்ற எண்னை ஜெர்ஸியில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். ஆனால் , ஏற்கனவே அணியில் ஒருவர் வைத்திருந்த காரணமாக 45 என்ற எண்ணை எடுத்துக் கொண்டார். ஏனெனில் 4 மற்றும் 5 ஆகிய எண்ணைக் கூட்டினால் 9 வரும்

Bumrah

ஜஸ்பிரித் பும்ரா – 93 :

தனது பிறந்த வருடம் 1993 ஆம் ஆண்டு நினைவில் வைத்துக் கொள்வதற்காக 93 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார் பும்ரா.

Advertisement