- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023 புத்தாண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்திய அணி களமிறங்கும் முதன்மை அட்டவணை இதோ

கோலகாலமாக பிறந்துள்ள 2023 புத்தாண்டை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வருடமாக இருக்க வேண்டுமென அனைவரும் வாழ்த்தும் நிலையில் 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் செயல்பட உள்ளது. குறிப்பாக கடந்த வருடம் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்ததால் துவண்டு கிடக்கும் இந்திய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்கு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை வென்று சரித்திரம் படைக்கவும் இந்திய அணியினர் போராட உள்ளனர்.

இந்த நிலையில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்திய களமிறங்கும் முதன்மை கால அட்டவணையை பற்றி பார்ப்போம். இந்த அட்டவணைக்கு இடையே உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அல்லது திடீரென்று இருநாட்டு வாரியங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு புதிய தொடர்கள் நடத்தப்படலாம். ஆனால் இந்த அட்டவணை தான் இந்திய அணியின் முதன்மை அடிப்படை அட்டவணையாகும்.

- Advertisement -

ஜனவரி (இலங்கைக்கு எதிராக): புத்தாண்டில் முதலாவதாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா களமிறங்குகிறது. அதற்கான அட்டவணை:
முதல் டி20 : ஜனவரி 3, மும்பை
2வது டி20 : ஜனவரி 5, புனே
3வது டி20 : ஜனவரி 7 ராஜ்கோட்
முதல் ஒன்டே : ஜனவரி 10, கௌகாத்தி
2வது ஒன்டே : ஜனவரி 12, கொல்கத்தா
3வது ஒன்டே : ஜனவரி 15, திருவனந்தபுரம்

ஜனவரி/பிப்ரவரி (நியூசிலாந்துக்கு எதிராக): இலங்கைத் தொடருக்கு பின்பாக மீண்டும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா களமிறங்குகிறது. அந்த அட்டவணை இதோ:
முதல் ஒன்டே : ஜனவரி 18, ஹைதெராபாத்
2வது ஒன்டே : ஜனவரி 21, ராய்ப்பூர்
3வது ஒன்டே : ஜனவரி 24, இந்தூர்
முதல் டி20 : ஜனவரி 27, ராஞ்சி
2வது டி20 : ஜனவரி 29, லக்னோ
3வது டி20 : பிப்ரவரி 1, அகமதாபாத்

- Advertisement -

பிப்ரவரி/மார்ச் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக): அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 டெஸ்ட் மட்டும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா களமிறங்குகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் 4 போட்டியில் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரை இந்தியா வென்றால் மட்டுமே ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும். அந்த அட்டவணை இதோ:


முதல் டெஸ்ட் : பிப்ரவரி 9 – 13, நாக்பூர்
2வது டெஸ்ட் : பிப்ரவரி 17 – 21, டெல்லி
3வது டெஸ்ட் : மார்ச் 1 – 5, தரம்சாலா
4வது டெஸ்ட் : மார்ச் 9 – 13, அகமதாபாத்
முதல் ஒன்டே : மார்ச் 17, மும்பை
2வது ஒன்டே : மார்ச் 19, விசாகப்பட்டினம்
3வது ஒன்டே : மார்ச் 22, சென்னை

மார்ச் – மே: அதைத்தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் – மே வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

ஜூன்(டெஸ்ட் சாம்பியன்ஷிப்): அதைத்தொடர்ந்து இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2022 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் பட்சத்தில் இந்தியா விளையாடும். அதற்கு வாய்ப்பும் அதிகமுள்ளது.

ஜூலை/ஆகஸ்ட் (வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்): அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் களமிறங்க உள்ளது. அதற்கான அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது.

- Advertisement -

செப்டம்பர்(ஆசிய கோப்பை): அதன் பின் 2023 ஆசிய கோப்பை இந்தியா பங்கேற்க உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா விளையாடுமா என்பது சந்தேகமாகியுள்ளது. இருப்பினும் இத்தொடர் பொதுவான மண்ணில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக): 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதற்கான அட்டவணையும் பின்னர் வெளியாகும்.

அக்டோபர்/நவம்பர் (உலகக்கோப்பை): அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுகிறது. முதல் முறையாக முழுமையாக தொடரை சொந்த நாட்டிலேயே நடத்தும் இந்தியா 2011க்குப்பின் கோப்பை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

நவம்பர்/டிசம்பர் (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்): உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் இந்தியா 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை ஆஸ்திரேலிய வாரியம் பின்னர் அறிவிக்கும்.

இதையும் படிங்க2023 உ.கோ’க்கு 20 பேர் ரெடி, ஃபிட்னெஸ் முதல் செலக்சன் வரை – இந்திய அணியில் பிசிசிஐ செய்யும் 4 அதிரடி மாற்றங்கள்

டிசம்பர்/ஜனவரி (தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்): அதன்பின் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்தியா 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணை பின்னர் வெளியாகும்.

- Advertisement -
Published by