அணிவீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடனும் அதே உடற்தகுதியை கட்டுக்குள் வைத்திருப்பதும் எவ்வளவு அவசியம் என்பதை சமீபகாலங்களாக உணர்ந்துவருகின்றனர்.தன்னுடைய உடற்தகுதியில் சிறிது குறைந்தாலும் அணியில் இடம் கிடைக்காமல் போய்விடும் என்பதை இளம்வீரர்களுக்கு தெரியும்.
பயிற்சியின் போதும் சரி விளையாட்டின் போதும் சரி ஒவ்வொரு வீரருக்கும் தன்னுடைய உடலில் இருக்கும் ஒவ்வொரு கலோரியும் எவ்வளவு அவசியம் என்பதும் புரியும்.உடலில் கலோரிகள் குறைந்தால் ஸ்டாமினா இல்லாமல் விரைவில் நாம் சக்தியிழந்து விடுவோம்.
இதன்போன்ற காரணங்களால் தான் இப்பொழுதெல்லாம் எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் சிகிரெட் பிடிப்பதில்லை.
இந்த படத்திலிருப்பவர்கள் விராட்கோலியும்,கிறிஸ் கெயிலும் ஆவர். இந்த புகைப்படத்தில் பார்த்தால் விராட்கோலி புகைபிடிப்பது தெரியும்.
இது விராட்கோலி இளம்வயதிலிருக்கும் போது ஒரு கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட படம். இப்பொழுதெல்லாம் கோலி பற்ற வைக்காத சிகிரெட்டை கூட கைகளில் பிடிப்பதில்லையாம்.மற்ற இந்திய அணியினரும் தற்போதெல்லாம் புகைபிடிக்காமலிருப்பதற்கான காரணங்கள் இவைதான்.