இந்திய பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் கொண்ட லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது – கபில் தேவ் பேட்டி

kapil3
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi-Shastri

- Advertisement -

கடந்த ஜூலை 30 ஆம் தேதி வரை இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழு பரிசீலித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பயிற்சியாளர் குறித்து கபில் தேவ் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களில் இறுதியாக தற்போது நாங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளோம். அதன்படி 6 பேர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டாம் மூடி, பில் சிமென்ஸ், மைக் ஹஸன் மற்றும் இந்திய வீரர்கள் லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங் மற்றும் ரவி சாஸ்திரி இந்த ஆறு பேரை இந்திய அணியின் பயிற்சியாளராக இறுதி கட்ட தேர்வில் உள்ளனர் என்று கபில் தேவ் கூறினார்.

Ravi

இந்நிலையில் கோலியின் விருப்பம் ரவிசாஸ்திரி மீது அதிகமாக இருப்பதால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஏனெனில் கோலி ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்த வாரம் இந்திய அணியின் பயிற்சியாளர் குறித்த முழு தகவலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement