உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5 இந்திய பவுலர்கள் – பட்டியல் இதோ

Bowler
- Advertisement -

கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமாக தொடராக கருதப்படுவது 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர்தான். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கரும் அதிக விக்கெட் எடுத்த வீரர்களாக ஆஸ்திரேலியாவில் க்லென் மெக்ரத்தும் உள்ளனர்.

worldcup

தற்போது இந்த பதிவில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஜாஹீர் கான் 18 விக்கெட்டுகள் – 2003

இவர் கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இவருக்கு 23 வயதே ஆகியிருந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஜாகிர் கான் ஜிம்பாப்வே, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என அனைத்து அணிகளுக்கும் எதிராக 2 விக்கெட்டுகளும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளும். கென்யா அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா 18 விக்கெட்டுகள் -2019

2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஜாகீர்கான் இருந்ததைப்போல, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பும்ரா இருந்தார். இந்தத் தொடரில் மட்டும் மொத்தம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியுஸிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Bumrah-1

ரோஜர் பின்னி 18 விக்கெட்டுகள் – 1983

இந்திய அணி முதன் முதலாக கடந்த 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்றது . கபில்தேவ் தலைமையிலான இந்த உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்றது .இதில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ரோஜர் பின்னி. மொத்தம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் .இவர் வேறு யாருமில்லை முன்னாள் இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் தந்தைதான் இவர்.

- Advertisement -

உமேஷ் யாதவ் 18 விக்கெட்டுகள் – 2015

2015 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. வேகப்பந்து வீச்சாளராக இருந்த உமேஷ் யாதவ் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று தொடரில் இருந்தும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Umesh

ஜாஹிர் கான் 21 விக்கெட்டுகள் – 2011

2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். இவர் இந்த தொடரில் மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணிக்காக உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வரும் இவரே. இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

Advertisement