- Advertisement -
இந்திய கிரிக்கெட்

9 வருடம் கழித்து வெற்றி.. ஹிட்மேன் – கிங் அபாரம்.. ஆஸியிடம் அவமானத்தை தவிர்த்த இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 வருடம் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இறுதியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி சிட்னி நகரில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை பொறுப்புடன் பந்து வீசிய இந்தியா 46.4 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் மார்ஷ் 41, மேத்தியூ ஷார்ட் 30, டிராவிஸ் ஹெட் 29 மான் ரென்ஷா 56 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ரோஹித் அசத்தல்:

அவர்களது ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 183/3 என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை 236க்கு சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேப்டன் சுப்மன் கில் 24 (26) ரன்களில் ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 2 டக் அவுட்டுக்கு பின் பொறுப்புடன் விளையாடி முதல் ரன்னை எடுத்த போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவருடன் இணைந்து விளையாடி ரோஹித் சர்மா அரை சதத்தை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்தார். அதே போல விராட் கோலியும் பொறுப்புடன் விளையாடி ஃபார்மை கண்டறிந்து அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

கிங் கோலி இஸ் பேக்:

நேரம் செல்ல செல்ல ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய அந்த ஜோடியில் ரோஹித் சர்மா சதத்தை அடித்து இந்தியாவை பற்றி பாதைக்கு வந்தார். தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியின் நல்ல ஆட்டத்தால் 38.3 ஓவரில் 237/1 ரன்கள் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதில் விராட் கோலி 7 பவுண்டரியுடன் 74* (81) ரன்கள் அடித்து போட்டியை ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: சிட்னி சதம் மூலம் முதல் வீரராக சர்வதேச போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

13 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ரோஹித் சர்மா 121* (125) ரன்கள் விளாசி தம்மை கழற்றி விட துடிக்கும் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்தார். அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை இழந்தாலும் ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியைத் தவிர்த்தது. அத்துடன் 2016க்குப்பின் சிட்னி மைதானத்தில் 9 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தியது.

- Advertisement -