- Advertisement -
இந்திய கிரிக்கெட்

525 ரன்ஸ்.. சென்னையில் தெ.ஆ அணியை வெளுத்த இந்தியா உலக சாதனை.. ஷபாலி – மந்தனா ஜோடி புதிய சாதனை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்க பவுலர்களை ஆரம்பம் முதலே அதிரடியாக எதிர்கொண்டனர். அதில் சமீபத்திய ஒருநாள் தொடரில் இரட்டை சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் மந்தனா அதே வேகத்தில் இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்க பவுலர்களை எடுத்து வாங்கினார். அந்த வகையில் அசத்தலாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
மறுபுறம் இவர்களை விரைவாக பிரிக்க முடியாமல் முடியாமல் தென்னாபிரிக்க அணி திணறியது. அதை பயன்படுத்தி நேரம் செல்ல செல்ல தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே சதமடித்து இந்தியாவை வலுப்படுத்தினர். அந்த வகையில் 52 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று தென்னாப்பிரிக்காவை வெளுத்த இந்த ஜோடி 292 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ஸ்மிருதி மந்தனா 27 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 149 (161) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (292) பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடி என்ற உலக சாதனையை ஷபாலி வர்மா – மந்தனா ஜோடி சென்னை மண்ணில் நிகழ்த்தியது. இதற்கு முன் கடந்த 24ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பாகிஸ்தானைச் சேர்ந்த சஜிதா மற்றும் பலூச் ஆகியோர் 241 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த சுபா சதீஷ் 15 ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ஜெமிமா தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷபாலி வருமா 23 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதமடித்து 205 (197) ரன்கள் விளாசி ஒரு வழியாக அவுட்டானார்.

இதையும் படிங்க: ப்ளீஸ் இறுதிப்போட்டியிலாவது ஷிவம் துபேவை தூக்கிட்டு அவரை விளையாட வையுங்க – ரசிகர்கள் கோரிக்கை

அவரைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் 42* ரன்களும் ரிச்சா கோஸ் அதிரடியாக 43* (33) ரன்களும் எடுத்தனர். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 525/4 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக ஒரு மகளிர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற இங்கிலாந்தின் 89 வருட சாதனையை உடைத்த இந்தியா புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1935ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச் நகரில் இங்கிலாந்து முதல் நாளில் 431/2 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -