இங்கிலாந்து நம்பிக்கை இல்லாமல் விளையாடுகிறது! “இந்தியா நிச்சயம் டெஸ்ட் தொடரை வெல்லும்” இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நம்பிக்கை. !

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் மிகமோசமாக தோல்வி அடைந்தது.

team

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் 203ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது அன்னைவரையும் ஈர்த்துள்ளது. இதனால் மீதமுள்ள இரண்டு போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இங்கிலாந்து அணி தற்போது அவர்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், எனவே இந்திய அணி நிச்சயம் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். சௌதாம்ப்டனில் நடைபெற உள்ள போட்டியை வெற்றிபெற்று இந்திய அணி தொடரை நிச்சயம் சமப்படுத்தும் மேலும் இந்திய அணி தொடரையும் வெல்லும் என கூறியுள்ளார்.

bajji

தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இங்கிலாந்து சூழ்நிலைக்கு அவர்கள் பழகி கொண்டார்கள். ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினாள் அது அணிக்கு நிச்சயம் சாதகமாக இருக்கும் எனக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.