- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வங்கதேசம் டஃப் சவால் கொடுப்பாங்க.. ஆனா இந்த காரணத்தால் இந்தியாவை ஜெயிக்க முடியாது.. கங்குலி ஓப்பன்டாக்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் கடந்த வாரம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது.

அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வென்று வங்கதேசம் சாதனை படைத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதல் முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் வரலாறு படைத்தது. எனவே அந்த தன்னம்பிக்கையுடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

டஃப் கொடுப்பாங்க:

இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்திய தன்னம்பிக்கையால் இந்திய அணிக்கு வங்கதேசம் இம்முறை மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்தால் தோற்கடிக்க முடியாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை போன்ற சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அஸ்வின், ஜடேஜாவை ஆகியோரை தாண்டி இந்தியாவை வீழ்த்துவது கடினம் என்று கங்குலி கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல. எனவே வங்கதேசத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் இந்தியா வித்தியாசமான மீன். சொந்த மண்ணாக இருந்தாலும் வெளியூராக இருந்தாலும் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள அவர்கள் சிறப்பான அணி”

- Advertisement -

இந்தியா வெல்லும்:

“எனவே வங்கதேசம் வெல்வதை நான் பார்க்கப்போவதில்லை. இந்தியா தொடரை வெல்லும். இந்தியாவில் நீங்கள் அதிகமாக சுழலை பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக சென்னையில் கொஞ்சம் அதிக பவுன்ஸ் இருக்கும். அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் உலகின் சிறந்த 4 ஸ்பின்னர்களாக உள்ளனர். எனவே அது எளிதல்ல. இந்தியாவில் விளையாடும் போது ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்”

இதையும் படிங்க: எல்லாமே முடிஞ்சுன்னு நினைச்சோம்.. டி20 உ.கோ இந்தியா ஜெய்க்க ரசிகர்கள் தான் காரணம்.. ரிஷப் பண்ட்

“இந்தியா நல்ல அணி. ஆனால் இந்தியா கண்டிப்பாக வங்கதேசத்திலிருந்து கடினமான கிரிக்கெட்டை எதிர்பார்க்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் அவர்கள் இத்தொடருக்கு வருகிறார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -