தோனி ஸ்டம்பிங் செய்தது போல் ஸ்டம்பிங் செய்து அசத்திய அண்டர் 19 வீரர் – வைரலாகும் வீடியோ

Dhruv
- Advertisement -

அண்டர்-19 உலககோப்பை தொடர் தென்ஆப்பிரிக்காவில் நேற்று முடிவடைந்தது. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது. இந்திய அணி அடித்த 177 ரன்களை பங்களாதேஷ் அணி எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி வெறும் 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன்களை போராடி எடுத்தார். பின்னர் 178 என்ற எளிதான இலக்குடன் ஆடிய வங்கதேச அணி கடுமையாக சொதப்பிய பின்னர், அந்த அணியின் கேப்டன் ஓரளவுக்கு நன்றாக ஆடி கடைசியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

இதே போட்டியில் தல தோனியை நினைவுபடுத்தும் விதமாக ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் இந்தியாவின் பிஷ்னோய் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜுரேல் சாமர்த்தியமாக ரன் அவுட் செய்தார். வங்கதேச வீரர் பந்தை மடக்கி விட சற்று சில அடிகள் பேட்ஸ்மேன் முன்னால் சென்றார் அதனை பயன்படுத்திய இந்தியாவின் கீப்பர் மிக கேஷுவலாக தோனியை போன்று ஸ்டம்பிங் செய்தார். இந்த வீடியோவை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வையலாகி வருகிறது.

Advertisement