தென்னாப்பிரிக்க அணியை பழிதீர்க்க காத்திருக்கும் இந்தியா. கடைசியா நடந்தது என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Ind-1

- Advertisement -

இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடர் என்பதால் இதில் இந்திய அணி வெற்றி பெற அதிக முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை இந்தியா வீழ்த்த முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது. அது யாதெனில் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அப்போது அந்த தொடரில் இந்திய அணியை தென்ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி தொடரை இழந்த காரணத்தினால் தற்போது இந்திய மண்ணில் வைத்து அதற்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய அணி தொடரை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகிறது.

மேலும் தற்போது இந்தியாவில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும், பலமான அணியாகவும் இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி தென் ஆப்பிரிக்க அணியின் அனுபவ வீரர்களான ஸ்டெயின் டிவில்லியர்ஸ் போன்றோர் அந்த அணியில் இல்லை என்பதால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement