11 வருட பகை..! கபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி..?

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.

kapildev

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வரும் கோலிக்கு ஒரு முக்கியமான டெஸ்ட் தொடராக கருதப்படுகிறது. இந்திய அணி 1932 ஆம் ஆம் ஆண்டு இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. அதன் பின்னர் பல இந்திய கேப்டன்கள் சார்பில் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது.

இதில் வடேகர்(1971), கபில் தேவ் (1981), டிராவிட்(2007) ஆகியோர் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலும், 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை.

koli

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றால், அது 11 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றியாக அமையும். இந்த சாதனையை இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக உள்ள கோலி படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

india-vs-england-will-virat-kohli-join-league-of-wadekar-kapil-dev-dravid-by-winning-test-series

இந்திய அணிக்காக இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளை தலைமையேற்று விளையாடியுள்ள கோலி 21 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்றுள்ளார். அதே போல 52 ஒரு நாள் போட்டிகளில் கோலி கேப்டனாக இருந்துள்ளார். அதில் 39 போட்டிகளில் வெற்றியும் 12 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.