விராட், தவான் மைதானத்தில் போட்ட குத்தாட்டம்.! வைரலாகும் வீடியோ

Kohli-Dhavan
Advertisement

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கப்பதற்க்கு முன்பாக இங்கிலாந்து உள்ளூர் அணியுடனான பறிச்சி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் போது கோலி மற்றும் தவான் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 25 ஆம் தேதி நடந்த இந்த டெஸ்ட் போட்டி சில பல காரணங்களால் 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றப்பட்டது. இந்த போட்டியின் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய எசெக்ஸ் அணி 359 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய மூன்றாம் நாள் முடிவில் 89-2 என்ற நிலையில் இருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஆடுகளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்பதற்காக இசை வாத்தியங்களும் வாசிக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தவான் தீடீரென்று பாங்க்ரா நடனமாடி அசத்தினார். தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement