இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு, விராட் கோலியின் அபாரமான சதம் என்று இருந்தும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தில் படு தோல்வியடைந்தது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கோலி செய்த தவறு தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையையான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பர்மிங்ஹாமில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வினிற்கு இடையில் சில மணி நேரம் ஓவர்கள் அளிக்கப்படவில்லை என்று நாசர் ஹுசைன், கோலி மீது குற்றசாட்டை வைத்துள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய நாசர் ஹுசைன் “இங்கிலாந்து அணி 87/7 என்ற நிலையில் இருந்த போது குரன் மற்றும் ஆதில் ரஷீத் காலத்தில் இருந்தனர். ஆனால், சில காரணத்தால் அஸ்வின் 1 மணி நேரத்திற்கு மேல் களத்தில் இல்லை. அப்போது தான் இந்திய அணி கட்டுப்பாட்டை இழந்தது. விராட் கோலி ஒரு கேப்டனாக அப்போது சிந்தித்திருக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் 20 வயது இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பான சராசரியை கொண்ட பந்துவீச்சாளரை(அஸ்வின்) எதற்காக பயன்படுத்தவில்லை என்று கோலி எண்ணி இருக்க வேண்டும்’ என்று கோலியை கிழித்துள்ளார்.
இந்த போட்டி குறித்து மேலும் பேசிய நசீர் ஹுசைன் ‘சாம் குரன் தான் இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். கோலி 200 ரன்களை எடுத்திருக்கலாம் ஆனால், போட்டியை மாற்றியது யார்? இரண்டு இன்னிங்ஸிலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார். இங்கிலாந்து அணி 87-7 என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து அணி 180 ரன்களை குவிக்க மிகவும் உதவியாக இருந்தார். அவர் ஒரு சிறப்பான ஆட்டக்காரர்’ என்று தெரிவித்துள்ளார்.