உலகக்கோப்பை கால்பந்து .! இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி.! ரசிகர்கள் எதிர்பாராத விருந்து .!

India

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த, பிரான்ஸ் மற்றும் கிரோயோட்டியா அணிகள் மோதும் உலக கோப்பை கால் பந்து தொடரின் இறுதி போட்டி நாளை (ஜூலை 15) இரவு துவங்க உள்ளது. அதே போல இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (ஜூலை 14) துவங்கவுள்ளது.

England-player

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை கைபற்றிய இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்போது இன்று (ஜூலை 14) நடக்கவுள்ள போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி.

கிரிக்கெட்டை விட அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டாக கால் பந்து விளையாட்டு இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் பிரேசில், ஜெர்மன், ரஸ்சியா ஆகிய அணிகள் வெளியேறின. தற்போது இந்த தொடரின் மூன்றாவது இடத்திற்காக பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கிறது.

india-cricket-team

அதே போல இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 14) துவங்க உள்ளது. ஆனால், இந்த போட்டி நாளை (ஜூலை 15) தான் நடைபெற இருந்தது . ஆனால், நாளை உலக கோப்பை கால் பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற உள்ளதால். இந்த போட்டியின் தேதி மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாம்.