இனி ‘சைனா மேன்’ பாட்சா பலிக்காது..! புதிய யுக்தியை கையில் எடுத்த இங்கிலாந்து வீரர்கள்.!

Kuldeep-Yadav-bowler

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் சைனா மேன் குல்தீப் யாதவின் மாயாஜால சுழல் பந்து வீச்சால் இங்கிலாந்து அணி திணறியது.ஆனால், இரண்டாவது டி20 போட்டியில் சைனா மேன் வித்தை ஈடுபடவில்லை.

kuldeep
கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க 5 ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இந்திய அணியின் குல்தீப் யாதவ் கைப்பற்றினர்.அதிலும் இந்த போட்டியின் 14 வது ஒவரில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணி வீரர்களை திணறடித்தார்.

குல்தீப் யாதவ் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் பேசியபோது கூட” குல்தீப் யாதவ் இந்த தொடரில் எங்களுக்கு கண்டிப்பாக ஒரு அச்சுறுத்தலாக இருப்பார்” என்று தெரிவித்திருந்தார். மேலும், புதிதாக களமிறங்கிய சைனா மென் குல்தீப் யாதவ் பந்துகளை எப்படி சமாளிப்பது என்பதற்க்க முதல் போட்டிக்கு பின்னர் மெர்லின் மிஷினை பயன்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முடிவு செய்தனர்.

- Advertisement -

kuldeep-yadav

இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மெர்லின் என்ற ஸ்பின் பவுலிங் மிஷினை பயன்படுத்தி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அது அவர்களுக்கு நன்றாகவே கை கொடுத்தது. இரண்டாவது போட்டியில் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்த குலதீப் யாதவ் விக்கெட் ஏதும் எடுக்காமல் தடுமாறினார். குல்தீப் ஓவர்களில் விக்கெட் விளாமல் பார்த்துக்கொண்டதே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.

Advertisement