கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த இந்தியா மற்றும் இலங்கை எதிரான கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக ,கதார் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனமான அல் ஜசீரா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அண.
அதில் 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள் , 3 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 3 தொடரிலும் வெற்றிபெற்றது. இதில் டெஸ்ட் போட்டிக ட்ராவில் முடிந்தது, ஆனால் 2 வது மற்றும் 3 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இலங்கையில் உள்ள கல்லே மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 12 -16 தேதிகளில் நடந்த இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டது என்றும், இந்த போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதற்கான வீடியோ ஆதாரங்களும் இருக்கிறது என்று அல் ஜசீரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டர் ராபின் மோரிஸ் என்பவர், மைதானத்தின் பிட்சை இந்தியாவிற்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று காலே மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் தாரங்கா இண்டிகாவிடம் கேட்டதாகவும், அதற்காக அவர் பிட்சை பேட்டிங் பிட்சாக மாற்றியதாக அல் ஜசீரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டியை போன்றே 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது அப்போது நடைபெற்ற பேட்டியும் பிக்ஸ் செய்யப்படது தான் என்றும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது அல் ஜசீரா நிறுவனம்.