சாக்கு சொல்லாதீங்க.. பாகிஸ்தானுக்கு ஆபத்து வந்தப்போ நாங்க இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ணிருக்கோம்.. அப்ரிடி அதிருப்தி

- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால் அந்தத் தொடரில் நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே மல்லுக்கட்ட துவங்கியுள்ளது.

ஏனெனில் 2008க்குப்பின் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது. குறிப்பாக 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.

- Advertisement -

சாக்கு சொல்லாதீங்க:
அதே போல இம்முறையும் தங்களுடைய 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் வாரியம் ஒருவேளை வரவில்லையெனில் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்தத் தயாராகியுள்ளது. இதற்கிடையே தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக கலக்காமல் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டுமென வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டார். அதே போல பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் இங்குள்ள ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து விராட் கோலி இந்தியாவையே மறந்து விடுவார் என்று சாகித் அப்ரிடி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சாகித் அப்ரிடி கூறியுள்ளார். இருப்பினும் அதையும் தாண்டி இந்தியாவில் 2016 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தியா மட்டும் பாதுகாப்பு பிரச்சனையை சாக்காக சொல்வதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அப்ரிடி பேசியது பின்வருமாறு. “கடினமான நேரங்களிலும் நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சென்றுள்ளோம்”

இதையும் படிங்க: இந்த 2 விஷயம் மிஸ்ஸிங்.. இந்தியாவிடம் ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடி இலங்கை தோத்துட்டாங்க.. கம்ரான் அக்மல்

“இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் பாகிஸ்தான் வாரியமும் அரசும் இந்தியா செல்வதற்கான வழியை துவங்கின. அதே போல இந்தியா விரும்பினால் வரலாம். ஆனால் விரும்பவில்லையெனில் பாதுகாப்பு என்பதை அவர்கள் சாக்காக பயன்படுத்துகின்றனர்” என்று கூறினார்.

Advertisement