- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மறுபடியும் 36க்கு ஆல் அவுட்டாகிடாதீங்க.. 2024 தொடருக்கு இந்தியா தயாராக போட்டியை அறிவித்த ஆஸி வாரியம்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19இல் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதன் பின் 2020/21 தொடரிலும் ரகானே தலைமையில் அசத்திய இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

அதனால் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றை இந்தியா படைத்தது. அதைத் தொடர்ந்து இம்முறை சாம்பியனாக களமிறங்க உள்ள இந்தியா மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

ஆஸி வாரியம் அறிவிப்பு:
முன்னதாக 2020/21 பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்றது. ஆனால் அதற்கு முழுமையாக தயாராகாமல் களமிறங்கிய இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா மோசமான சாதனையுடன் தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் அங்கிருந்து மீண்டெழுந்து கடைசியில் காபா கோட்டையை உடைத்த இந்தியா தொடரை வென்றது வேறு கதை. இந்நிலையில் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உதவும் வகையில் பயிற்சிப் போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக கடந்த முறை பகலிரவு பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கியது இந்தியா 36க்கு ஆல் அவுட்டாக முக்கிய காரணமானது.

- Advertisement -

எனவே இம்முறை வரும் நவம்பர் 30 – டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கான்பெரா நகரில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இந்திய அணி பகலிரவு பயிற்சிப்போட்டியில் விளையாடும் என்று அந்நாட்டு வாரியத்தின் இயக்குனர் நிக் ஹாக்லி அறிவித்துள்ளார். அது இரு அணிகள் தயாராவதற்கும் தங்கள் நாட்டு ரசிகர்கள் நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை கண்டுகளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாட்மிட்டன் வந்தா ஜஸ்பிரித் பும்ரா என்னோட அடியை தாங்க மாட்டாரு.. ரகுவன்ஷிக்கு சாய்னா நேவால் பதிலடி

இதைத் தொடர்ந்து பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதன் பின் ஆஸ்திரேலியாவை வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்கும் பகலிரவு 2வது போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதற்கு முன்பாகவே அந்தப் பயிற்சி போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -