அசைக்க முடியாத இடத்தில் இந்திய அணி. வெளியான ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – விவரம் இதோ

Ind

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Ishanth

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 347 ரன்களைக் குவித்தது கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி பங்களாதேஷ் அணியை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கி தனது மூன்றாவது டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி இந்த தொடரையும் சேர்த்து மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியான ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கி இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோர்ததில்லை அனைத்து போட்டிகளையும் வெற்றியுடன் முடித்துள்ளது.

- Advertisement -