ருதுராஜுக்கு மீண்டும் டாட்டா.. தமிழக வீரருக்கு இடம்.. தெ.ஆ டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி

IND vs RSA
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடைபெறும் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் நவம்பர் 8, 10, 13, 15 ஆகிய தேதிகளில் அந்த 4 போட்டிகள் நடைபெற உள்ளது.

அந்த போட்டிகள் முறையே டர்பன், கிபர்ஹா, செஞ்சூர்யன், ஜோகன்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடும் விளையாடும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா தொடர்:

குறிப்பாக சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் சதம் அடித்து ஒரு வழியாக தன்னுடைய திறமையை நிரூபித்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது. அவர்களுடன் பேட்டிங் துறையில் திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த அணியில் ருதுராஜ் கழற்றி விடப்பட்டுள்ளது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆல் ரவுண்டர்களாக நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதே போல ஐபிஎல் தொடரில் அசத்திய மற்றொரு இளம் வீரர் ரமந்தீப் சிங் முதல் முறையாக இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டில் இருந்து வருண் சக்கரவர்த்தி மட்டும் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணி:

சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடிய அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் தேர்வாகியுள்ள அவருடன் ரவி பிஸ்னோய் மற்றொரு ஸ்பின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அர்ஷ்தீப், சமீபத்தில் உள்ளூர் தொடர்களில் அசத்திய விஜயகுமார், ஆவேஷ் கான், யாஷ் தயாள் ஆகியோர் வேகப்பந்து வீச்சு துறையில் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளனர்.

இதையும் படிங்க: ஷமி இல்லை.. 2024 பார்டர் – கவாஸ்கர் ஆஸ்திரேலிய தொடருக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணி

அதே சமயம் சிவம் துபே, ராயன் பராக், மயங் யாதவ் ஆகியோர் காயத்தால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 2024 தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி: சூரியகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைசக், ஆவேஷ் கான், யாஷ் தயாள்

Advertisement