- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி மகளிர் உ.கோ: 340 ரன்ஸ்.. வாழ்வா – சாவா போட்டியில் நியூசியை வெளுத்த இந்தியா சாதனை ஸ்கோர்

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி நவிமும்பையில் 24வது போட்டி நடைபெற்றது. அதில் செமி ஃபைனலுக்கு செல்ல வென்றாக வேண்டும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் – ஸ்மிருத்தி மந்தனா ஆகியோர் நியூசிலாந்து பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டனர். பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொறுப்பாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து அசத்தினார்கள். நேரம் செல்ல செல்ல நங்கூரம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த ஜோடியில் மந்தனா சதத்தை அடித்தார்.

- Advertisement -

வாழ்வா – சாவா போட்டியில்:

33.2 ஓவர்கள் வரை நியூசிலாந்துக்கு சவாலைக் கொடுத்த அந்த ஜோடி 212 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தைக் கொடுத்தது. அப்போது மந்தனா 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 109 (95) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக விளையாடினார்.

எதிர்ப்புறம் தொடர்ந்து நியூசிலாந்தை அபாரமாக எதிர்கொண்ட பிரத்திகா ராவல் 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதத்தை அடித்து 122 (134) ரன்களை அடித்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 10 ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஜெமிமா 38 பந்துகளில் அரை சதத்தை அடித்த போது மழை வந்ததால் போட்டி 49 அவர்களாக குறைக்கப்பட்டது.

- Advertisement -

இந்தியா சாதனை ஸ்கோர்:

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜெமிமா 11 பவுண்டரியுடன் 76* (55), ரிச்சா கோஸ் 4* (1) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அவர்களது சிறப்பான ஆட்டத்தால் 49 ஓவரில் இந்தியா 340/3 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் வாயிலாக ஒரு மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்த ஒரு காரணம் போதாதா? அடுத்த போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலா குல்தீப் ஆடுவார் – விவரம் இதோ

இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 330/5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் வாழ்வா – சாவா போட்டியில் இந்திய மகளிரணி தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை ஸ்கோரை அடித்து அசத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ரோஸ் மேரி, எமிலியா கெர், சுசி பெட்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -