- Advertisement -
இந்திய கிரிக்கெட்

298 ரன்ஸ்.. ஃபைனலில் 2வது சாதனை ஸ்கோர்.. எட்டாத இலக்கை அடித்த இந்தியா.. தெ.ஆ’வை மடக்கி வெல்லுமா?

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் இரண்டாம் தேதி நவி மும்பையில் நடைபெற்றது. மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஆரம்பத்திலேயே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.

அந்த ஜோடியில் மந்தனா 8 பௌண்டரியுடன் 45 (58) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அபாரமாக விளையாடிய ஷபாலி வர்மா அரை சதத்தை அடித்து 7 பவுண்டரி 2 சிக்சருடன் 87 (78) ரன்கள் விளாசி அசத்தினார். அடுத்ததாக வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் தடுமாறி 24 ரன்னில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா 298 ரன்ஸ்:

மிடில் ஆர்டரில் தீப்தி சர்மா நங்கூரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். எதிர்ப்புறம் அமன்ஜோத் கௌர் 12 ரன்னில் அவுட்டான போதிலும் அடுத்து வந்த ரிச்சா கோஸ் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (24) ரன்கள் விளாசி தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து நிதானமாகவே விளையாடிய தீப்தி அரை சதத்தை அடித்து 58 (58) ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.

இறுதியில் ராதா யாதவ் 3* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா 298/7 ரன்கள் அடித்தது. அதன் வாயிலாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 3வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது. 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 356/5 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா முதலாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

மறுபுறம் 330 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை ஓரளவு மடக்கிய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக அயபோங்கா காகா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதைத் தொடர்ந்து 299 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா துரத்தி வருகிறது. நடப்பு உலகக் கோப்பையில் தென்னாபிரிக்கா ஒரு முறை கூட சேசிங் செய்து தோல்வியை சந்தித்ததில்லை.

இதையும் படிங்க: சுப்மன் கில்லை நீக்கிட்டு அவருக்கு ஓப்பனருக்கான சேன்ஸை தாங்க – ரசிகர்கள் குமுறல்

இருப்பினும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அதிகபட்சமாக 275 ரன்களை மட்டுமே சேசிங் செய்துள்ளது. ஒருமுறை கூட 290+ ரன்களை தென்னாப்பிரிக்கா சேசிங் செய்தது கிடையாது. எனவே இந்திய அணி முடிந்தளவுக்கு நல்ல ஸ்கோரை இலக்காக நிர்ணயித்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் வெற்றி என்பது இந்திய பவுலர்கள் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -