4வது டி20யில் இந்தியா 167 ரன்ஸ்.. ரோஹித்தை முந்திய சூரியகுமார் வெளிநாடுகளில் வரலாற்று சாதனை

Ind vs aus 4
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் தொடரின் 4வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கராரா மைதானத்தில் இந்திய நேரப்படி 1.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (21) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த சிவம் துபேவும் அதிரடி காட்டத் தடுமாறினார். தொடர்ந்து தடுமாற்றமாகவே விளையாடிய அந்த ஜோடியில் சிவம் துபே 22 (18) ரன்னில் நாதன் எலிஸ் வேகத்தில் போல்ட்டானார்.

- Advertisement -

சூரியகுமார் சாதனை:

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அரை சதத்தை நெருங்கிய சுப்மன் கில்லும் 46 (39) ரன்னில் எலிஸ் வேகத்தில் கிளீன் போல்ட்டானார். மிடில் ஆடரில் 2 சிக்சரை பறக்க விட்ட கேப்டன் சூரியகுமார் 20 (10) ரன்களில் சேவியர் பார்லட் வேகத்தில் அவுட்டானார். இதையும் சேர்த்து சேனா நாடுகளில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 43 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதன் வாயிலாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சேனா வெளிநாடுகளில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை சூரியகுமார் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ்: 43
2. ரோஹித் சர்மா: 41
3. விராட் கோலி: 30
4. கேஎல் ராகுல்: 28
5. யுவ்ராஜ் சிங்: 26

- Advertisement -

இந்தியா 167 ரன்ஸ்:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த திலக் வர்மா 5, ஜிதேஷ் சர்மா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 12 (7), அக்சர் பட்டேல் 21* ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுத்தனர். அதனால் தப்பிய இந்தியா 20 ஓவரில் 167/8 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க: 68 பந்துகளில் 39 ரன்கள் அடித்தால் போதும்.. டிம் டேவிட்டின் உலகசாதனையை முறியடிக்க காத்திருக்கும் – அபிஷேக் சர்மா

மறுபுறம் கடைசி 6 ஓவரில் 46 ரன்கள் மட்டும் கொடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை மடக்கிப் பிடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நாதன் எலிஸ், ஆடம் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடுகிறது.

Advertisement