இந்தியா ஜெயிச்சாச்சுன்னு இப்போவே சொல்லலாம். வளைச்சி போட்ட பந்துவீச்சாளர்கள் – பவுலர்கள் அசத்தல்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

IndvsNz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஒவ்ரகள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக குப்தில் 33 ரன்களையும், சைபர்ட் 33 ரன்களையும் குவித்தனர்.

சிறிய மைதானமான இந்த ஈடன் பார்க் மைதானத்தில் இன்றும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்த்த நியூசிலாந்து அணி ரன்களுக்குள் சுருண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் குவிக்க மட்டுமின்றி, பேட்டிங் செய்யவே கஷ்டப்பட்டனர்.

Nz

குறிப்பாக பும்ரா மற்றும் சாமி ஆகியோரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. ஷமி 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான ராஸ் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Rahul-2

இந்திய அணி வெற்றிபெற 133 ரன்களே தேவை என்பதால் இந்திய அணியின் வெற்றி இப்போதே கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement