மீண்டும் சொதப்பிய பண்ட். பங்களாதேஷ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு – விவரம்இதோ

Ind

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி தற்போது நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Toss

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் தவான் மற்றும் ரோஹித் ஏமாற்றம் அளிக்க ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடினர். ராகுல் 52 ரன்களும், ஐயர் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சொதப்பலாக விளையாடிவரும் பண்ட் இந்த போட்டியிலும் மீண்டும் 6 ரன்களில் அவுட் ஆகி சொதப்பினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதனால் தற்போது 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாட பங்களாதேஷ் அணி தயாராகிவருகிறது.

Iyer

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் அதேபோன்று பங்களாதேஷ் வெற்றி பெற்றால் முதன்முறையாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -