இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி. தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் – அலறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 11.4 ஓவர்களில் 135 ரன்கள் குவித்தது.

ரோஹித் 34 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதன் பிறகு மூன்றாவது வீரராக களமிறங்க பண்ட் வழக்கம் போல சொதப்பி டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். 29 பந்துகளை சந்தித்த அவர் 70 ரன்களை குவித்தார் இதில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும்.

Rahul

முடிவில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. தவிர ராகுல் 56 பந்துகளில் 91 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதனை அடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பேட்டிங் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகிறது.

Advertisement