இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், இலங்கை, மலேசியா,தாய்லாந்து ஆகிய அணிகள் மோதும் 7 வது மகளிர் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தொடரில் வெற்றி பெரும் முனைப்பில் உள்ளது.
தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழையும் தருவாயில் இருக்கிறது.கடந்த 7 ஆண்டுகளாக நடைபெயற்று வரும் இந்த போட்டி தொடர், இதுவரை 4 முறை ஒருநாள் போட்டி தொடராகவும், 3 முறை டி20 போட்டியாகவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுவரை இந்த ஆசிய கிரிக்கெட் தொடரில் 6 முறை செம்பியன் பட்டதை வென்றுள்ள இந்திய மகளீர் அணி இந்த ஆண்டு நடை பெற்று ஆசிய கோப்பை போட்டிகளில் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படியாக வைத்துள்ளது இந்திய அணி. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் , வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சரிக்கு சமமான இடத்தில் உள்ளது.
ஆனால் இந்திய அணி மட்டும் ரன் விகிதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியுடன் நாளை கடைசி லீக் ஆட்டத்தில் மோத உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெரும் பட்சத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறும். இதனால் இந்த போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு அரை இறுதி போட்டியாகவே கருத்தப்படும் என்றும் கூறலாம்.