வெட்டி வீராப்பை விட்டுட்டு தடவாமல் எங்கள ஃபாலோ பண்ணுங்க, தடுமாறும் இந்தியாவுக்கு நாசர் ஹுசைன் கொடுக்கும் அட்வைஸ் என்ன

hussain
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா நாக் அவுட் சுற்றில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. மறுபுறம் பாகிஸ்தானை ஃபைனலில் தோற்கடித்து 2வது கோப்பையை வென்று சாதனை படைத்த ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா நிர்ணயித்த 169 இலக்கை 1 விக்கெட் கூட இழக்காமல் 170/0 ரன்களை குவித்து அடித்து நொறுக்கி அதிரடியான வெற்றி பெற்றது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

Kohli

- Advertisement -

முன்னதாக ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து கடந்த 2017க்குப்பின் இயன் மோர்கன் தலைமையில் சரவெடியாக பேட்டிங் செய்யும் அணுகுமுறையை பின்பற்றி அதிரடிப்படையாக மாறி 2019 உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. தற்போது டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ள அந்த அணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சரித்திரத்தை படைத்துள்ளது. அந்த வகையில் தற்சமயத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த அணியாக திகழும் இங்கிலாந்தை எதிரணிகள் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

வெட்டி வீராப்பு வேண்டாம்:

குறிப்பாக உலகத்திற்கே அனுபவத்தை கொடுக்கும் ஐபிஎல் தொடரை நடத்தி திறமையான வீரர்களை வைத்திருந்தும் தடுமாறும் இந்தியா தங்களுடைய வீராப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கிலாந்தை பின்பற்ற வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில்  கூறினார். இந்நிலையில் இந்தியாவிடம் அபாரமான திறமை இருப்பதாக தெரிவிக்கும் மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி அதிரடியாக விளையாடுகிறார்களோ அதே போல உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலும் பயமின்றி விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து விளையாடிய அணுகுமுறையை பின்பற்றுமாறு இந்தியாவை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

ENg vs IND Jos Buttler Alex hales

“இந்தியா இப்போதும் மிகப்பெரிய சக்தியாகும். அவர்களுடைய அணியை பாருங்கள். உலகக்கோப்பையில் அவர்கள் தேர்ந்தெடுக்காத உத்தேச வீரர்களை பாருங்கள். அது போக கடைசி நேரத்தில் அவர்களிடம் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறினார்கள். அப்படி வலுவான வீரர்கள் இருந்தும் நாக் அவுட் என்று வரும் போது இந்தியா தங்களுடைய அணுகு முறையை மாற்ற வேண்டும். ஒருமுறை ரவி சாஸ்திரியிடம் இது பற்றி நான் கேட்ட போது “நாக் அவுட் போட்டிகளில் குறிப்பாக பேட்டிங்கில் நாங்கள் சுமாராக செயல்படுவதை மாற்ற வேண்டும்” என்று என்னிடம் கூறினார்”

- Advertisement -

அதை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வந்து இருதரப்பு தொடர்களில் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக மாற்றினார்கள். ஏனெனில் ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் 115 ரன்களை தெறிக்க விட்டார். ஆனால் அதை நீங்கள் தோற்றால் விமர்சிக்கப்படுவீர்கள் என்ற நிலையைக் கொண்ட நாக் அவுட் போட்டியில் கொண்டு வர வேண்டும். குறிப்பாக இம்முறை நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் மீண்டும் இந்தியா பழைய யுக்தியை கடைப்பிடித்து 10 ஓவரில் 66/2 என்ற தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது”

hussain

“என்னைப் பொறுத்த வரை இந்தியாவுக்கு இயன் மோர்கன் தலைமையில் கவலையின்றி எதிரணியை இங்கிலாந்து அடித்த குணம் தேவைப்படுகிறது. குறிப்பாக 20 ஓவர்களில் உங்களால் முடிந்தளவுக்கு எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்க வேண்டும். குறிப்பாக ஐபிஎல் தொடரில் எப்படி அடிக்கிறீர்களோ அதே போல இந்தியாவுக்கும் அடியுங்கள். ஐபிஎல் தொடரில் விளையாடுவது போல் இந்தியாவுக்காகவும் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் இந்திய வீரர்கள் செயல்பட வேண்டும். அதை நீங்கள் பின்பற்றி எப்போதாவது 120 ரன்களுக்கு அவுட்டானால் கூட நாங்கள் ஆதரவு கொடுப்போம்” என்று கூறினார்.

Advertisement