கங்குலி, தோனிக்கு அப்றம் யாருமில்லை, இனியாவது இந்தியா அந்த முடிவ எடுக்கணும் –  ரோஹித்தை விளாசும் அஃப்ரிடி

Afridi
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. அதிலும் ஆரம்பத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கூட கடைசி நேர அதிர்ஷ்டத்துடன் நாக் அவுட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானை விட தரமான வீரர்களுடன் ஆரம்ப முதலே சீராக செயல்பட்ட இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில் கொஞ்சம் கூட போராடாமல் வழக்கம் போல சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி 2014, 2015, 2016 ஆகிய தொடர்களில் நாக் அவுட் சுற்று வரை சென்று தோல்வியடைய ஆரம்பித்தது. அதன் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் 2017, 2019 ஆகிய வருடங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோலியை சந்தித்த இந்தியா உச்சகட்டமாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் முதன்முறையாக வரலாற்றுத் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

தோனி, கங்குலி மாதிரி:

அந்த நிலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதால் இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கொஞ்சம் கூட முன்னேறாமல் மீண்டும் அதே சொதப்பலை செய்துள்ளது. மேலும் முக்கியமான செமி ஃபைனலில் சுமாராக கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இந்திய கிரிக்கெட்டுக்கு சௌரவ் கங்குலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோருக்கு பின் தரமான கேப்டன்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Ganguly-dhoni

அதிலும் ஐபிஎல் தொடரில் நிறைய தரமான வீரர்கள் கிடைத்தும் அவர்களை சரியாக வழி நடத்த தெரியாத அளவுக்கு சமீப கால இந்திய கேப்டன்கள் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்த தோல்விகளை இப்படியே வளர விடாமல் பிசிசிஐ முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விஷயங்கள் இப்போது கவனிக்கப்படும், நீங்கள் வெற்றி பெறும்போது இவை சிவப்பு கம்பளத்தின் கீழ் துலக்கப்படுகின்றன. இன்று இந்தியா தோற்று விட்டதால் எல்லோரும் தோல்வியை பற்றி சிந்திக்கிறார்கள்”

- Advertisement -

“ஆனால் கூர்ந்து கவனித்தால் இந்திய அணிக்கு கங்குலி, தோனி ஆகியோருக்கு பின் நல்ல தலைவர் தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்களது அணியை ஒருவர் முன்னின்று நடத்த வேண்டும். அந்த வகையில் தோனிக்கு பின் அவர்கள் விராட் கோலியை முயற்சித்தார்கள். ஆனால் அவரது தலைமையில் அற்புதமான வெற்றி முடிவுகள் கிடைக்கவில்லை. தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலும் அதிரடியான செயல்பாடுகள் வெளிப்படவில்லை. பொதுவாக அணி தலைவரின் வேலை எப்போது முக்கியமாகும். அவர்களது செயல்பாடுகள் அதை விட முக்கியமாகும். மேலும் 2 மாதங்கள் விளையாடப்படும் ஐபிஎல் தொடரில் நிறைய வீரர்கள் வாய்ப்பு பெற்று அசத்துகிறார்கள்”

Afridi

“ஆனால் அதையும் தாண்டி இந்தியா நல்ல அணியை உருவாக்க தவறுகிறது என்றால் என்னைப் பொருத்த வரை நீங்கள் இன்னும் நிறைய வேலையை செய்ய வேண்டியுள்ளது என நினைக்கிறேன். எனவே இந்திய வாரியம் இதைப்பற்றி யோசித்து எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் கிரிக்கெட்டில் நிறைய முதலீடு செய்துள்ளார்கள். அதற்கு பலனாக நிறைய தரமான வீரர்களும் கிடைத்துள்ளார்கள். ஆனால் அந்த தரமான வீரர்கள் இருந்தும் நீங்கள் பெரிய தொடர்களை வெல்லவில்லை என்பது கவலைக்குரிய அம்சமாகும்” என்று கூறினார்.

Advertisement