- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி மகளிர் உ.கோ: வெறும் 4 ரன்ஸ்.. கையிலிருந்த வெற்றியை சோக் செய்த இந்தியா.. நாக் அவுட்டானதா?

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி இந்தூரில் 20வது போட்டி நடைபெற்றது. அதில் கடந்த 2 போட்டிகளில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் இலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 288/8 ரன்கள் அடித்து அசத்தியது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஹீதர் நைட் அதிகபட்சமாக சதத்தை அடித்து 109, அமி ஜோன்ஸ் 56 ரன்கள் குவித்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 4, ஸ்ரீசரணி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் சோக்கிங்:

அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு பிரதிகா ராவல் 6 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் மந்தனா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த ஹர்லின் தியோல் 24 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக விளையாடினார்.

3வது விக்கெட்டுக்கு மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த போது அரை சதமடித்து 70 (70) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த தீப்தி சர்மா பொறுப்புடன் விளையாடியதால் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது எதிர்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மந்தனா 88 (94) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா சொதப்பல்:

அடுத்து வந்த ரிச்சா கோஸ் 8 (10) ரன்னில் விக்கெட்டை கோட்டை விட்ட நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய தீப்தி சர்மா முக்கிய நேரத்தில் 50 (57) ரன்னில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் ஸ்னே ராணா 10*, அமன்ஜோட் கௌர் 18* ரன்கள் எடுத்தும் 50 ஓவரில் இந்தியா 284/6 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. குறிப்பாக கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது இந்தியா 10 ரன்களை மட்டும் அடித்து தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 224 நாட்கள் கழித்து இப்படி திணறுவதை தடுக்க.. தோனி வழியை ஃபாலோ பண்ணுங்க.. ஆரோன் அட்வைஸ்

சொல்லப்போனால் இந்தியாவுக்கு கடைசி 60 பந்துகளில் 62 ரன்கள், கடைசி 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அப்போது டெத் ஓவர்களில் சொதப்பலாக விளையாடிய இந்தியா சோக் செய்து கையில் வைத்திருந்த வெற்றியைக் கோட்டை விட்டது. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து செமி ஃபைனலுக்கு 3வது அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த இந்தியா செமி ஃபைனலுக்கு செல்ல தங்களது கடைசி 2 போட்டிகளில் நியூஸிலாந்து, வங்கதேசத்தை 100% வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -