
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 471 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 500 ரன்கள் குவிக்கும் வாய்ப்பைத் தவற விட்டது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியை முடிந்தளவு போராடிய இந்தியா 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 30, ரிஷப் பண்ட் 118, கேஎல் ராகுல் 137 ரன்களை எடுத்து அசத்தினார்கள். ஆனால் மீண்டும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டது.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 3, பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு 188 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 65 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்ததாக வந்த ஓலி போப் 8 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய பென் டக்கெட் சதத்தை அடித்து 149 ரன்கள் இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
அவரை அவுட்டாக்கிய சர்துள் தாகூர் அடுத்து வந்த ஹாரி புரூக்கை கோல்டன் டக் அவுட்டாக்கினார். ஆனால் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார். இருப்பினும் அடுத்ததாக வந்த ஜேமி ஸ்மித் சிறப்பாக விளையாடி 44* ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோ ரூட் 53* ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து 373/5 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: செஞ்சுரி அடிச்சா மட்டும் போதாது தம்பி.. இந்த மேட்ச்ல நாம தோத்தா அதுக்கு நீ தான் காரணம் – கொந்தளிக்கும் பேன்ஸ்
அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மறுபுறம் 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற வரலாறு காணாத மோசமான உலக சாதனை தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது. இந்தியாவின் இந்த அவமானத் தோல்விக்கு பேட்டிங்கில் இன்னிங்ஸிலும் நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியதும் ஃபீல்டிங் துறையில் ஜெய்ஸ்வால், ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் 4 – 5 கேட்சுகளை தவற விட்டு சொதப்பியதும் முக்கிய காரணமானது.