போட்டியே நடைபெறாம 4 வருஷம் கழிச்சி இந்திய அணி முதலிடத்தை இழக்க இதுவே காரணம் – வெளியான தகவல்

Ind-1
- Advertisement -

கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடமாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. தற்போது அந்த இடத்திற்கு புதிய அணி வந்துள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முக்கியமான தொடர்கள் முடியும் போதெல்லாம் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

ind-2

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திற்கும் சேர்த்து தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நான்கு வருடங்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த முதலிடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியும், மூன்றாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது. இந்த மூன்று அணிகளுக்கும் வித்தியாசம் ஒரே ஒரு புள்ளி மட்டுமே.

ஆஸ்திரேலியா 116 ரேட்டிங் உடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 115 ரேட்டிங்குடன் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி 114 ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து , இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன.

IND

இந்திய அணி விராட் கோலியின் தலைமை பொறுப்பு ஏற்றதில் இருந்து டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமாக ஆடி வருகிறது. இதன் விளைவாக 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்திய அணி நான்கு வருடமாக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. பின்னர் அதில் இந்த நான்கு வருடங்கள் கழித்து தற்போது தனது முதலிடத்தை இழந்துள்ளது இந்திய அணி.

- Advertisement -

அதுவும் இரண்டு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம். அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெற்றால் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதல் மூன்று இடங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 2 புள்ளிகள் என்பதால் அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெற்றால் உடனடியாக மாற்றம் ஏற்படும் என்றும் தெரிகிறது.

ind 1

கொரோனா வைரஸ் காரணமாக சமீபத்தில் நடைபெற இருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டதால் போட்டிகள் நடைபெறாத இந்த நேரத்தில் ஐசிசி எவ்வாறு இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்திய அணியை தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு பின்னுக்கு தள்ள காரணம் என்ன என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் ஐசிசி இதுகுறித்து வெளியிட்ட தகவலில் இந்திய அணியின் பின்னடைவு காரணத்தை தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி 2016 – 17 ஆம் ஆண்டு ஆடிய டெஸ்ட் போட்டிகளை கணக்கில் கொள்ளப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவீத மதிப்பெண்களும், 2019 மே மாதத்திற்கு பிறகு நடைபெற்ற போட்டிகளுக்கு 100 சதவீதம் மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.

IND

அதனடிப்படையில் 2016 – 17 காலகட்டத்தில் இந்திய அணி 12 டெஸ்ட் போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இவைகள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டு இந்திய அணிக்கு 114 புள்ளிகள் கொடுக்கப்பட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று அந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement