இந்திய அணியின் இந்த தோல்விக்கு இவர்தான் காரணம். 100 ஆவது டெஸ்ட் வெற்றி பதிவு செய்த நியூசி – விவரம் இதோ

Ind-lose
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்த ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Ind-1

- Advertisement -

முதல் இனிங்ஸில் படு மோசமாக பேட்டிங் செய்த இந்திய அணியால் 165 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதன்பிறகு முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி வில்லியம்சன், டெய்லர், ஜேமிசன் மற்றும் போல்ட் ஆகியோரது ரன் குவிப்பினால் 348 என்ற பெரிய ரன்களை குவித்தது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து.

அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து இரண்டு ஓவர்களில் 9 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி திகழ்ந்தார்.

Southee-1

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய செய்தார். மேலும் போல்ட் மற்றும் ஜேமிசன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக முதல் இன்னிங்சின் கடைசிகட்ட பேட்டிங்கில் ஜேமிசன் மற்றும் போல்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அவர்களது ரன் முன்னிலையை அதிகப்படுத்தினர்.

Jamieson

இந்த சில விடயங்களே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் (100) நூறாவது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement