8க்கு 8 வெற்றி.. இப்போ 6இல் 4 தோல்வி.. ரோஹித் தலைமையில் மிரட்டிய இந்தியாவை முடக்கிய அகர்கர், கம்பீர்

Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரை 2 – 1 என்ற கணக்கில் நியூஸிலாந்து வென்றது. அதனால் முதல் முறையாக இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோற்கடித்து நியூசிலாந்து வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது.

மறுபுறம் 1988 முதல் தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தொடர்ச்சியாக வென்று வந்தது. ஆனால் இந்தியாவின் அந்த வெற்றி நடை தற்போது நியூசிலாந்திடம் தோற்றதால் சுக்கு நூறாக உடைந்துள்ளது. முன்னதாக ரோஹித் சர்மா தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் சென்று தோற்றது.

- Advertisement -

மிரட்டிய இந்தியா:

அதற்காக அசராத இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றது. அதே வேகத்தில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் மிரட்டிய இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் ரோஹித் தலைமையில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது 39 வயதில் அவரால் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அந்த வாய்ப்பில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கில் தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் தொடரில் கழுத்து வலியால் அவர் விளையாடவில்லை.

- Advertisement -

முடக்கிய அகர்கர், கம்பீர்:

அதனால் தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து அசத்தியது. ஆனால் இத்தொடரில் மீண்டும் சுப்மன் கில் தலைமையில் விளையாடிய இந்திய அணி சொந்த மண்ணில் நியூஸிலாந்திடம் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தத்தில் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு வரை ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 8 வெற்றிகள் பெற்றது.

இதையும் படிங்க: 124 ரன்ஸ்.. சச்சின், காலிஸ், ரூட்டை முந்திய விராட் கோலி.. இந்தியாவின் வெற்றிக்கு போராடி 2 புதிய உலக சாதனை

இருப்பினும் புதிய முழு நேர கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் இந்தியா 4 தோல்விகளையும் சந்தித்து 2 தொடர்களையும் இழந்துள்ளது. இதிலிருந்து ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி மிரட்டலாக விளையாடியது என்றே சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்ட மிரட்டலான இந்திய அணி அஜித் அகர்கர், கெளதம் கம்பீரால் திடீரென கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் தலைமையில் முடங்கியுள்ளது என்றால் மிகையாகாது.0

Advertisement