தனது முதல் ஆசிய கோப்பையை த்ரில் வெற்றியுடன் கைப்பற்றிய மகளீரணி..!

inianwomescrick

இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், இலங்கை, மலேசியா,தாய்லாந்து ஆகிய அணிகள் மோதும் 7 வது மகளிர் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் தொடர்ந்து 6 முறை சாம்பியனாக இருந்த இந்திய அணியின் தொடர்வெற்றியை வங்கதேச அணி தகர்த்தெறிந்தது.

asiacup

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை ,இதுவரை 4 முறை ஒருநாள் போட்டி தொடராகவும், 2 முறை டி20 போட்டியாகவும் நடத்தப்பட்டு வந்தது. இந்த 6 தொடரிலுமே இந்திய மகளீர் அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இந்த தொடரின் 7 வது சீசன் இறுதி போட்டியில் 7 வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருந்தது இந்திய அணி.

நேற்று (ஜூன் 10 ) கோலாலம்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனானா இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

india-women

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்களான மிதிலி ராஜ் 11 ரன்களுக்கும், ஸ்ம்ரிதி மந்தனா 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மாவும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் மட்டும் நிதானமாக விளையாடி 42 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்து.

bangladesh

பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் துவக்கத்தில் இருந்தே நிதானமாக ரன்களை குவித்து வந்தது. ஒரு கட்டத்தில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீசினார். கடைசியில் இறுதி பந்தில் 2 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ,ஜகாரனா ஆலம் 2 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் முதன் முறையாக ஆசிய கோப்பையை வங்கதேச அணி கைப்பற்றியதுடன், 7வது முறையும் கோப்பையை வெல்ல இருந்த இந்திய அணியின் கனவையும் சிதைத்தது.