வெளியான டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல். இந்தியா தான் டாப் – எவ்ளோ பாயிண்ட்ஸ் பாருங்க

Kohli gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.#

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டி தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். உதாரணமாக ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் நடக்கிறதோ அதற்கேற்றார்போல் புள்ளிகள் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். உதாரணமாக ஒரு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் நடந்தால் ஒரு போட்டிக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும்.

அதன் அடிப்படையில் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வென்று உள்ளதால் தற்போது 60 புள்ளிகள் இந்திய அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 300 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியதில் இருந்து இந்திய அணி தோல்வி அடையாமல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர நியூசிலாந்து மற்றும் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் 2 ஆவது 3 இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ind-1

இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகளின் ஒட்டுமொத்த புள்ளிகளை சேர்த்தால் கூட இந்திய அணியின் 300 புள்ளிகளை சமன் செய்ய முடியவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகள் இதுவரை தங்களது புள்ளிக்கணக்கை துவங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement