44 வருடத்தில் மோசமான ஸ்கோர்..! 4 பேர் டக் அவுட்..! 43 ரன்னில் சுருண்டது வங்கதேசம்..! இந்தியாவுக்கு பின்பு பங்களாதேஷ்..!

west
Advertisement

வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகள்மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய முதல் டெஸ்ட் போட்டி விவான் ரிச்சர்ட் மைதானத்தில் நேற்று (ஜூலை 4) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சென்ற வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

வங்கதேச அணி 10 ரன்கள் எடுத்திருந்த போது தொடக்க ஆட்டக்காரர் தமீம் இஃபால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அவரை தொடர்ந்து மெய்ன் ஹாக்(1), முஷ்ஃபிகர் ரஹீம்(0), ஷாகிப் அல் ஹாசன்(0), மஹ்முதுல்லா(0) என்று அனைவரும் ஆட்டமிழக்க கொஞ்சம் நிலைத்து ஆடிய லிட்டன் தாஸும் 25 ரன்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார்.
Bangladesh
அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் வங்கதேச அணி 18.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 43 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 44 ஆண்டுகள் டெஸ்ட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ரன்களை எடுத்த இரண்டாவது அணி என்ற மோசமான பட்டியலில் இடம் பெற்றது வங்கதேச அணி.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமர் ரோச் 5 ஓவர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ரன்களை குவித்த பட்டியலில் முதல் இடத்தில நியூசிலாந்து அணி உள்ளது அந்த அணி 1955ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு ஆல் அவுட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று நெடைபெற்ற போட்டியில்

- Advertisement -
Advertisement