இன்றைய போட்டியில் இப்போவே வெற்றி பெற்றுவிட்டது என்றே கூறலாம் – விவரம் இதோ

Ind

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியுள்ளது. அதன்படி டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

Toss

அதன்படி இந்திய அணி தற்போது முதலில் பந்து வீசி வருகிறது. பங்களாதேஷ் அணி இதுவரை 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட தற்போதே வெற்றி பெற்று விட்டது என்று ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.

அதன் காரணம் யாதெனில் இந்திய அணி எப்பொழுதுமே சேசிங் செய்யும் போது பலமான அணியாகவே திகழ்ந்து வருகிறது. மேலும் கடைசியாக விளையாடிய 5வது போட்டியில் சேசிங் செய்யும்போது நான்குமுறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக இந்திய சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து நாம் பார்த்து வருகிறோம்.

dhawan 1

எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது இப்போது உறுதியாகிவிட்டது என்று டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய ரசிகர்கள் இணைய தளத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் வென்றால் தான் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -