102 ரன்ஸ்.. ஆஸிக்கு எதிராக இந்தியா 2 உலக சாதனை வெற்றி.. 52 வருட வரலாற்றை மாற்றிய எழுதிய சரித்திரம்

Team India Women
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் துவங்கும் 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி புதிய சண்டிகரில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முடிந்தளவு போராடி 49.5 ஓவரில் 292 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

இந்தியா அபாரம்:

அதிகபட்சமாக நட்சத்திர வீராங்கனை மந்தனா சதத்தை அடித்து 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் 117 (91) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் தீப்தி சர்மா 40, பிரதிகா ராவல் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு அதிகபட்சமாக டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி 9, ஜார்ஜியா வோல் 0 ரன்களில் அவுட்டானார்கள்.

மிடில் ஆர்டரில் எலிஸ் பெரி 44, பெத் மூனி 18, அனபெல் சதர்லேண்ட் 45 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். லோயர் ஆர்டரில் ஆஸ்லே கார்னர் 17, தஹிளா மெக்ராத் 10, ஜார்ஜியா 10 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இறுதியில் டார்சி பிரவுன் 14* ரன்கள் எடுத்தும் 40.5 ஓவரில் ஆஸ்திரேலியாவை 190 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்தியா 102 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

52 வருட உலக சாதனை:

இதன் வாயிலாக 7 முறை உலகச் சாம்பியன் மற்றும் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 1973 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பர்மிங்கம் நகரில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து 92 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: அதுல கலைஞரான வார்னே மாதிரி.. இந்தியாவின் சிராஜ் பிரஷர் பண்ணக்கூடிய பவுலர்.. ஜோ ரூட் பாராட்டு

அப்போதிலிருந்து உலகில் வேறு எந்த அணியாலும் ஆஸ்திரேலியாவை 100+ ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க முடியாத வரலாற்றை மாற்றி எழுதியுள்ள இந்திய மகளிரணி என்ற புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றிக்கு அதிகபட்சமாக கிராந்தி கௌட் 3, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். இந்த சரித்திர வெற்றியால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement