இறுதி ஆட்டத்தில் இரு முக்கிய மாற்றங்களுடன் விளையாட இருக்கும் இந்திய அணி – விவரம் இதோ

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 207 ரன்களை சேஸிங் செய்து அபார வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி அடித்த 170 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் தொடரின் தீர்வை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முடிவை தீர்மானிக்கும் இந்தப் முக்கிய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் அணியில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rahul

அதன்படி வீரரான ரோகித் சர்மாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்கி பார்க்கலாம் என்று யோசனை உள்ளதாம். ஏனெனில் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் ஆடி வரும் ரோஹித் ஓய்வின்றி விளையாடி வருவதால் அவர் இந்த தொடரில் சோபிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு பதிலாக உள்ளூர் தொடரில் சிறப்பாக அதிரடியாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில போட்டிகள் ஆகவே சுழற்பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சொதப்பி வரும் சுந்தர் நீக்கப்படலாம்.

Sundar

ஒருவேளை ரோஹித்தை அணியிலிருந்து நீக்கவில்லை என்றாலும் சுந்தர் நீக்கப்படுவது அவருக்கு பதிலாக குல்தீப் இறங்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏனெனில் சாகல் உடன் குல்தீப் இணைந்து பந்து வீசும் போது அது இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை தேடித் தந்திருக்கிறது அந்த ஜோடியை இந்த போட்டியில் களமிறக்க கேப்டன் கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே இன்றைய போட்டியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement