நாளைய போட்டியில் இந்திய அணி இதை மட்டும் செய்ஞ்சா. ரெகார்ட் மேல ரெகார்ட் தான் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளது. அதிலும் குறிப்பாக இதுவரை நியூசிலாந்து மண்ணில் இருமுறை டி20 தொடரில் இந்திய அணி தோற்று உள்ளது.

அதனால் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி டி20 தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை நீக்கி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் நடைபெறும் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணியை பழிதீர்க்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

kohli

இந்த தொடர் விராட் கோலிக்கு நியூசிலாந்தில் கேப்டனாக முதல் தொடர் என்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் சாதிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை வெல்லும் முதல் கேப்டன் என்ற பெருமையும் கோலிக்கு கிடைக்கும் அதுமட்டுமின்றி கோலி மேலும் 25 ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்திய கேப்டனாக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் கோலி சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement