அடுத்த மேட்ச்லயும் இந்திய அணி ஜெசிச்சா விட்ட இடத்தை மீண்டும் பிடிச்சிடலாம் – சாதிப்பாரா ரஹானே ?

Rahane

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி ஏழாம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Gill

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியோடு கேப்டன் விராட் கோலி தனது குழந்தையின் பிறப்புக்காக நாடு திரும்பினார். ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக மீதமுள்ள போட்டிகளில் முக்கிய வீரரான கோலி இல்லாமல் எப்படி இந்திய அணி சமாளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அஜிங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மேலும் இந்திய அணியை ஒரு பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு தற்போது ரஹானேவுக்கு கிடைத்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி சமீபத்தில் அந்த முதல் இடத்தை தவற விட்டது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட் பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் வகிக்கிறது.

Siraj-3

ஒருவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்லது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றினால் கூட இந்திய அணி 3-1 அல்லது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் அப்படி தொடரை கைப்பற்றும் போது தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.

- Advertisement -

Jadeja

ஏற்கனவே கோலி இல்லாமல் ரகானே பெற்ற வெற்றிக்கு இவ்வளவு பாராட்டுகள் என்றால் அவர் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி முதல் நிலைக்கு முன்னேறும், அதுமட்டுமின்றி இந்தியாவும் இழந்த தனது இடத்தை மீட்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் விளையாடியதை பார்க்கும்போது நிச்சயம் இந்த தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.